டெஹ்ரான்: இஸ்ரேல் - லெபனான் இடையேயான போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து, உலக பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான

டெஹ்ரான்: இஸ்ரேல் - லெபனான் இடையேயான போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து, உலக பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வணிக கப்பல்களும் செல்லலாம் என்ற முக்கிய அறிவிப்பை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெளியிட்டுள்ளார்.

தட்டுப்பாடு மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி போரை துவக்கின. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது.

ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது. பதிலுக்கு இஸ்ரேல், லெபனான் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தியது.

போர் தீவிரமடைந்ததையடுத்து, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததுடன், உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 40 நாட்களாக தொடர்ந்த போரை கைவிடும்படி அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு வார தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

அதன் பின், பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி பேச்சு நடந்தது. லெபனான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் பேச்சில் இடம் பெற்றன. 21 மணி நேரம் நடந்த பேச்சில் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

10 நாட்கள் ஈரான் உடனான அமைதி பேச்சுக்கு முட்டுக்கட்டையாக உள்ள லெபனான் – இஸ்ரேல் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பும் அமெரிக்காவில் சந்தித்து பேச்சு நடத்தின. அதன் முடிவில், லெபனான் – இஸ்ரேல் இடையே 10 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

லெபனான் – இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த அறிவிப்பு வெளியானதையடுத்து, அனைத்து வணிக கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதி அளிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று அறிவித்தார்.

இந்த அனுமதி அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச கப்பல்கள் அனைத்தும், ஈரான் கடல்சார் அமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ள ஒருங்கிணைந்த பாதையிலேயே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஈரானுக்கு நன்றி ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறந்ததற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், ஈரான் உடனான தற்போதைய போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. அதே நேரத்தில் நடந்து வரும் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. அடுத்த கட்ட விவாதங்கள் வார இறுதியில் இஸ்லாமாபாதில் நடக்க வாய்ப்புள்ளது. டிரம்ப், அமெரிக்க அதிபர்

• ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல அமெரிக்கா தடை விதித்திருந்த போதிலும், கிட்டத்தட்ட 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் மூன்று ஈரானிய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன. • ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை சேர்ந்த காப்பீட்டு நிறுவனங்கள், இந்த பாதையில் செல்லும் கப்பல்களுக்கு 100 கோடி ரூபாய் கூடுதல் காப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. இதையடுத்து, உலகளாவிய வர்த்தகம் மீண்டும் தொடங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. • இதற்கிடையே, பாகிஸ்தான் தலைமை தளபதி அசீம் முனீர் ஈரானில் தற்போது தங்கியிருந்து, ஈரான் – அமெரிக்கா இடையே நிரந்தர அமைதி உடன்பாடு ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார். • ஈரான் அணுசக்தி திட்டங்களை கைவிடும் வரை தங்களது கடல் தடை நீடிக்கும் என அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார்.

Source link