சட்டமும், இசையும் மாறுபட்டதல்ல; உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா பேச்சு

கொச்சி: ‘சட்டமும், இசையும் மாறுபட்டதல்ல. இசைக்கு எப்படி தாள அமைப்பு மற்றும் இசை இணக்கம் தேவைப்படுகிறதோ, அதைப்போலவே, நீதிபதிகள் செயல்படுவதற்கு, அரசியலமைப்பும், சட்டங்களும் தேவைப்படுகின்றன,’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா தெரிவித்துள்ளார். கொச்சியில் கேரள நீதித்துறை அகாடமி மற்றும் தேசிய மேம்பட்ட சட்ட ஆய்வுகள் பல்கலையும் இணைந்து நடத்தும் 3 நாள் கருத்தரங்கு இன்று துவங்கியது. இதன் துவக்க விழாவில் கேரள முதல்வர் சதீசன், உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா, கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் சவுமேன் சென் மற்றும அனில் கே நரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் நீதிபதி மோகனா பேசியதாவது; இசையும், சட்டமும் வேறுபட்டவையல்ல. ஒரு இசையை உருவாக்க தாள அமைப்பு, இசை இணக்கம் போன்றவை தேவைப்படுகிறதோ, அதைப் போலத்தான், நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், செயல்படுவதற்கான கட்டமைப்பாக அரசியலமைப்பும், சட்டங்களும் உள்ளன. சட்டத்தை நேர்மையாகவும், துல்லியமாகவும் செயல்படுத்தும் பணிகளை நீதிபதிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், ஒவ்வொரு சட்ட வழக்கிற்கும் பின்னாலும் ஒரு மனித அனுபவம் உள்ளது என்பதை நீதிபதிகள் அங்கீகரிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சவுமேன் சென், ‘ஒரு இசைக் கலைஞர் இசைக் குறிப்புகளை உணர்ந்து வாசிப்பதைப் போலவே, நீதிபதியும் சட்ட வரம்புகளுக்குள் நின்று சூழலையும், நோக்கத்தையும் புரிந்து கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும்,’ என்று கூறினார்.

Source link