சமூகமான பாதையில் இந்திய-சீன உறவுகள்; மேம்படுவது மிக முக்கியம்; மத்திய அரசு திட்டவட்டம்

புதுடில்லி: இந்திய-சீன உறவுகள் சமூகமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது; மக்களிடையே உறவுகள் மேம்படுவது மிக முக்கியம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டில்லியில் நிருபர்களிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: வரவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு உலகத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்யா – உக்ரைன் மோதல் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். பாரிஸ் ஈபிள் டவர் பகுதியில் பி.ஏ.பி.எஸ் அமைப்பின் வருகையின் போது, அங்குள்ள பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவம், இது சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு இடையிலான தனிப்பட்ட விஷயம்; இதில் இந்திய அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளப் பாதிப்புகளைத் தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு நிலவரத்தை டில்லி, காத்மாண்டு மற்றும் பீஜிங்கில் உள்ள இந்தியக் கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. சீனப் பகுதியில் தங்கியுள்ள 400 இந்தியக் குடிமக்களும் பாதுகாப்பாக உள்ளனர்.

இந்திய-சீன உறவுகள் படிப்படியாக ஒரு சமூகமான திசையில் சென்று கொண்டு இருக்கிறது. உறவுகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புவதும், மக்களிடையேயான உறவுகள் மேம்படுவதும் மிகவும் முக்கியமானவை, மக்களிடையேயான உறவுகள் அல்லது அந்த உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது குறித்துப் பேசும்போது, ​​அத்தகைய உறவுகளை ஊக்குவிக்க உதவும்; விசா தொடர்பான விவகாரங்கள் குறித்தும் நாங்கள் பேசுவோம். இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

Source link