சினிமா வரலாற்றில் முதல் முறை? திரும்பி பார்க்க வைத்ததா?

பொதுவாக டி ராஜேந்தர் படங்களில் நாம் பார்ப்பது கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் போன்ற விஷயங்கள் கலந்து நடிக்கவும் செய்திருப்பார். தற்பொழுது அதையெல்லாம் மிஞ்சும் வகையில் படத்தின் அனைத்து கிராப்டுகளையும் ஒரே ஆள் செய்து சாதனை படைக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாக்கி இருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். அந்தத் திரைப்படம் எந்த அளவு ரசிக்க வைத்திருக்கிறது என்பதை பார்ப்போம்…

நாயகன் சங்ககிரி ராஜ்குமார் மற்றும் நான்கு நண்பர்கள் ஒரு அரியவகை கண்டுபிடிப்பை வைத்துக்கொண்டு இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை உயிரையும் டெலிட் செய்து விட்டு இவர்கள் மட்டுமே பத்து நாட்கள் உலகை ஆள வேண்டும் என நினைக்கின்றனர். இந்த விபரீதமான ஆசை இவர்களுக்குள் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்தியது? அந்த ஆசையால் உலகில் என்னென்னெல்லாம் நடந்தது? என்பதே இப்படத்தின் மீதி கதை.

இந்தப் படத்தின் சுவாரசியம் என்னவென்றால் மேலே சொன்ன நபர்களின் கதாபாத்திரத்தை ஒரே ஆளாக அனைத்திலும் வெவ்வேறு கெட்டப்புகளுடன் நடித்திருக்கிறார். அதுபோக நாயகனின் காதலியாகவும் இன்னும் பல கதாபாத்திரங்களையும் சங்ககிரி ராஜ்குமாரே நடித்திருக்கிறார். யாருடைய உதவியும் இன்றி தனி ஒரு மனிதனாக ஒரு முழு திரைப்படத்தை உருவாக்கி கவனம் பெற்றிருக்கிறார். அதன் மூலம் தமிழ் சினிமாவில் இப்படியான ஒரு படத்தை முதல் முறையாக உருவாக்கிய பெருமையை பெற்றுள்ளார். அதேபோல் படத்தின் தொழில்நுட்ப பணிகள் மட்டுமின்றி கிராபிக்ஸ் உட்பட அனைத்து விதமான வேலைகளையும் இவர் ஒருவரே கவனித்திருக்கிறார். 

அனைத்து வேலையையுமே வேகமாகவும் நேர்த்தியாகவும் அவர் செய்திருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதன் மூலம் ஒரு வித்தியாசன்மான அனுபவத்தை பார்ப்பவர்களுக்கு கொடுத்திருக்கிறார். சினிமாவில் இப்படி எல்லாம் செய்ய முடியுமா என மக்களை யோசிக்கவும் வைத்திருக்கிறது. ஒரு படமாக பார்க்கும் பொழுது படத்தில் பல்வேறு விதமான மைனஸ்கள் தென்பட்டாலும் படமும் சொல்ல வந்த விஷயத்தை சிறிய பட்ஜெட்டில் கூறியிருப்பதாலும் பெரும்பாலும் அயர்ச்சியுடன் கூடிய காட்சி அமைப்புகளாகவே அமைந்திருக்கிறது. அது படத்திற்கு சற்று பாதகமாக அமைந்திருந்தாலும் இப்படியான வித்தியாசமான முயற்சியை எடுத்து இருப்பதாலேயே இப்படத்தை கண்டிப்பாக காணும் எண்ணம் அனைவருக்கும் தூண்டப்பட்டு இருக்கிறது. 

இந்தத் திரைப்படம் பெரிய கமர்சியல் வெற்றி அடைந்து வசூல் பெறுகிறதோ இல்லையோ ஆனால் அனைவரும் வாயை பிளக்கும் அளவிற்கு ஒரு வித்தியாசமான அதுவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் செய்து உலக சினிமா ஹிஸ்டரியில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.  

 ஒன் – ஒன் மேன் ஆர்மி!

Source link