சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம்; ஒப்பந்தத்தைக் கைவிட்ட பிரபல நிறுவனம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற நூல், அமெரிக்கப் பதிப்பகமான ’ஆல்ஃபிரட் ஏ நாப்’ மூலம் 2026 நவம்பர் 10 அன்று உலகளவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த புத்தகம் ஆறு தசாப்தங்களை உள்ளடக்கியது என்று தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த புத்தகத்தில் சோனியா கந்தியின் ஆரம்பக் கால இத்தாலி வாழ்க்கை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவரது படிப்பு, ராஜீவ் காந்தியுடனான சந்திப்பு, தனது மாமியார் இந்திரா காந்தியுடனான அனுபவம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதோடு, கணவர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு அவர் இந்திய அரசியலில் கட்டாயமாக நுழைந்தது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த புத்தகத்திற்கு உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 

இந்நிலையில், இந்த புத்தகத்தில் சில மாற்றங்களைச் செய்து, குறிப்பிட்ட சில பகுதிகளை நீக்குமாறு பதிப்பகம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையைச் சோனியா காந்தி ஏற்க மறுத்துள்ளார். அதனால், அந்நிறுவனம் புத்தகத்தைப் பதிப்பிக்க மறுத்து ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளது.  

இதையடுத்து, இந்த புத்தகத்தை வெளியிட அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ‘ஹார்பர் காலின்ஸ்’ நிறுவனம் ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ’ஹார்ப்பர் காலின்ஸ் இந்தியா’ நிறுவனம் இன்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி சோனியா காந்தியின் சுய சரிதை புத்தகம் குறிப்பிட்ட நாளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Source link