‘தக் லைஃப்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் விஜய் சேதுபதி – சாய் பல்லவியை வைத்து ஒரு படம் எடுத்து வருகிறார். காதலை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க லைகா புரொடக்ஷன்ஸ் வழங்குகிறது. மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு ‘ப்ரொடக்சன் நம்பர் 23’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது. கொல்கத்தாவில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என சிறிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த வீடியோவில் ‘சி, ம், இ, ல், ஞ், வெ, ல்’ என்ற எழுத்தும் சில காட்சிகளில் வரிசையாக வருகிறது. இதனால் இந்த எழுத்தில் டைட்டிலுக்கான சொல்லாக இருக்குமோ என்ற ரீதியில் ரசிகர்கள் இந்த எழுத்துக்களை வைத்து டைட்டில் உருவாக்கி வருகின்றனர். பலரும் ‘வெஞ்சி இல்லம்’, ’இஞ்சி வெல்லம்’ என கமெண்ட் செய்து வருகின்றனர். அது சரியானதா என்பது 7ஆம் தேதி தெரிந்துவிடும். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் படத்தின் மீது பெரும் கவனம் ஏற்பட்டுள்ளது.
Between light and shadow, life finds its colours ✨
The title of #ManiRatnam’s next, featuring #VijaySethupathi and #SaiPallavi, will be unveiled on September 7 ❤️#ManiRatnam@arrahman@MadrasTalkies_@LycaProductions@VijaySethuOffl@Sai_Pallavi92@sreekar_prasad… pic.twitter.com/OnIl9ttfZd
— Lyca Productions (@LycaProductions) September 4, 2026
