திண்டுக்கல்: வடமதுரை அருகே மின்வாரியத்திடம் வழங்க தடையில்லா சான்று கோரிய விவசாயி கோவிந்தராஜிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., பாண்டியராஜன் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவர் மின்வாரியத்திடம் வழங்க தடையில்லா சான்று கோரி விஏஓ பாண்டியராஜனை அணுகினார். அதற்கு அவர், 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி கோவிந்தராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அவர்கள் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய, 5,000 ரூபாயை வி.ஏ.ஓ., பாண்டியராஜனிடம் விவசாயி கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வி.ஏ.ஓ., பாண்டியராஜனை கையும், களவுமாக கைது செய்தனர். அவருடன் உதவியாக இருந்த, ஓய்வு பெற்ற முன்னாள் கிராம உதவியாளர் ராமலிங்கத்தையும் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
