தமிழகம் எல்லாத் துறைகளிலும் முன்னோடியாக மாற வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம்; அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: இந்தியாவிலேயே தமிழகம் எல்லாத் துறைகளிலும் முன்னோடியாக மாற வேண்டும் என்பது முதல்வர் விஜய்யின் எண்ணம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: பொதுவாக தமிழகத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் முதல்வர் விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தமிழகமே கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது.

உலக நாடுகளில் இருக்கும் தமிழர்களும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் முதன்முறையாக மாற்றுத் தலைவராக நேற்று முன்தினம் ஒரு மகளிர் சட்டசபையில் அவையை நடத்தினார்கள். நேற்றைய தினம் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவர் அவையை நடத்தும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக இந்த நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. எல்லாரும் எல்லாம் பெற வேண்டும் என்பதுதான் முதல்வர் விஜய்யின் நோக்கம். அந்த நோக்கத்தில் தான் இரண்டு நாட்களாக அவையில் அந்த நிகழ்வுகள் நடைபெற்று உள்ளது. நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தை சிறந்த முறையில் வழிநடத்தி செல்லக்கூடிய முதல்வராக விஜய் இருக்கிறார். அவருக்கு தமிழகம் இந்தியாவிலேயே எல்லாத் துறைகளிலும் முன்னோடியாக மாற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதுதான் அவரது மனதில் இருக்கும் எண்ணங்கள். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்

Source link