தமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்

தமிழகத்தில் இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும். இதை யாராலும் மாற்ற முடியாது என்று வி.சி.க தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் பேசியுள்ளார். 

தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக த.வெ.க தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. 

இந்த ஆட்சியில் விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் த.வெ.க அமைச்சரவையில் இடம் பெற்ற நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. இதனிடையே அடுத்து வரும் இடைத்தேர்தலில் த.வெ.க தலைமையில், வி.சி.க, ம.தி.மு.க, காங்கிரஸ் மற்றும் ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகளுடன் இணைந்து குடாட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணிக்கு, மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இனி தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சி தான். அதை எவறாலும் மறுக்க முடியாது. இன்றைக்கு காலம் ஒரு கட்டளை இட்டிருக்கிறது. இதை விஜய் அவர்களே விரும்பி கொடுத்தாரா என்பது வேறு, ஆனால் காலம் தந்திருக்கிறது. ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் 30-40 ஆண்டுகாலம் அரசியல் களத்தில் தாக்குப்பிடித்து பயணித்து வருகிறோம்.

எப்போதோ கிடைக்கிற வாராது போல் வந்த மாமணி என்று சொல்வார்களே அதுபோல, திராவிட முன்னேற்ற கழகத்தில் நாங்கள் ஒரு அமைச்சரை பெற்றிருக்க முடியுமா? அதில் என்ன பயன் என்பது வேறு, ஆனால் பெற்றிருக்க முடியுமா? பெற முடிந்ததா? ஆனால் இன்றைக்கு காலம் ஒரு கட்டளை இட்டிருக்கிறது. ஒரு கூட்டணி ஆட்சி முறையை உருவாக்கி இருக்கிறது. அதுதான் விடுதலை சிறுத்தைகளின் வெற்றி. அப்படி ஒரு சூழல் வரும்போது இனி தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது கூடட்டணி ஆட்சி தான். அதை எவறாலும் மறுக்க முடியாது என்று கூறியுள்ளார்.  

Source link