தமிழ் ஹாக்கி லீக் போட்டி: எஸ்டிஏடி அணி சாம்பியன்

சென்னை: தமிழ் ஹாக்கி லீக் (டிபிஎல்) போட்டியில் எஸ்டிஏடி விளையாட்டு விடுதி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சென்னையில் நேற்று நடைபெற்ற ஆடவர் இறுதிப் போட்டியில் எஸ்டிஏடி விளையாட்டு விடுதி அணியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும் மோதின. ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

எஸ்டிஏடி சார்பில் வி.அரவிந்த், ஸ்ரீநிவாசன்,என்.அரவிந்த் ஆகியோர் தலா ஒரு கோலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் தில்ராஜ் சிங் 2 கோல்களும், முத்துசெல்வன் ஒரு கோலும் அடித்தனர்.

இதையடுத்து நடைபெற்ற பெனால்டி ஷூட்-அவுட்டில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன. இதைத் தொடர்ந்து சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்க சடன் டெத் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் எஸ்டிஏடி அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது.

Source link