தமிழகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதால் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் என வேட்பாளர்களை அறிவித்து. இதனைத் தொடர்ந்து, தேர்தல் பொறுப்பாளர்களையும் நியமனம் செய்து அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
பெரம்பூரில் ரியல் போட்டி…எந்த கட்சி முந்துகிறது?
அதே போல் பரப்புரைக்காக பிற கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறது. இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிபோட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் தலைவர் சீமான் இன்று மதியம் அல்லது மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்
இதனால் இந்த இரண்டு தொகுதிகளிலும் நான்குமுனை போட்டி நிலவ உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருக்கு வாய்ப்பு வங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தாராபுரத்தில் புதிய முகத்தை நிறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டமரகதம் குமாரவேல்69,284 வாக்குகள் பெற்றார். தவெக வேட்பாளர் எழில் கேத்ரின் 62,090 வாக்குகளும், திமுக வேட்பாளர் அம்லு பொன்மலர் 59,838 வாக்குகளும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமனுக்கு 4,950 வாக்குகள் கிடைத்தன. தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நாதக சார்பில் மீண்டும் ஜானகி ராமனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
களமிறங்கும் நாதக வேட்பாளர்கள்
இதற்கு முன்னதாக 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் மல்லை சத்யா 83,076 வாக்குகள் பெற்ற நிலையில், 3,570 வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமாரவேல் வெற்றி பெற்றார். அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுமிதா 9,293 வாக்குகள் பெற்றிருந்தார்.
இந்நிலையில், கடந்த தேர்தலை ஒப்பிடும்போது மதுராந்தகம் தொகுதியில் வாக்கு வங்கியில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தவெக களமிறங்கியுள்ள நிலையில், அதன் தாக்கம் இடைத்தேர்தலில் எவ்வாறு இருக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, நாதக வேட்பாளராக மீண்டும் ஜானகி ராமன் களமிறங்கினால், சீமான் தலைமையிலான கட்சியின் வாக்கு வங்கியை தக்கவைக்க முடியுமா என்பதும் முக்கிய கேள்வியாக உள்ளது.
சரிந்த வாக்கு சதவீதம்
கடந்த பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்குத் தொகுதிகளில் சராசரியாக 5,000 முதல் 6,000 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. வழக்கமாக 10,000 முதல் 20,000 வாக்குகள் வரை பெறும் அக்கட்சி, விஜய் களமிறங்கியதால் ஏற்பட்ட தாக்கத்தினால் கணிசமான வாக்குகளை இழந்ததாகக் கூறப்படுகிறது.
சீமான் மீதான விமர்சனம்
தேர்தலின் போது சீமான் திமுகவிற்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், விஜய்யை தனிப்பட்ட முறையில் விமர்சித்துப் பேசியது மக்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய காரணங்களால் நாம் தமிழர் கட்சியால் பெரிய அளவில் மாற்றத்தையோ அல்லது செல்வாக்கையோ ஏற்படுத்த முடியாது என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
மும்முனைப் போட்டி
இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு வேட்பாளராகக் களத்தில் நின்றாலும், உண்மையான போட்டி தவேக, திமுக மற்றும் அதிமுக ஆகிய மூன்று பிரதான கட்சிகளுக்கு இடையே தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குகள் தீர்மானிக்கும் காரணி என்ன?
சீமான் தனது பிரச்சார பாணியை மாற்றிக்கொண்டு தீவிரமாகப் பிரச்சாரம் செய்தால் மட்டுமே கூடுதல் வாக்குகளைப் பெற முடியும்; இல்லையெனில் கடந்த முறை பெற்ற குறைந்த அளவிலான வாக்குகளையே பெறக்கூடும். தற்போதைய சூழலில் வெற்றியையோ அல்லது தோல்வியையோ தீர்மானிக்கும் சக்தியாக நாம் தமிழர் கட்சி மாற வாய்ப்பில்லை.
Source link
