தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தப்ப முடியாது; லஞ்சம் வாங்கினால் உடனே தண்டனை; வாட்ஸ் அப் எண்ணை பகிர்ந்த கீர்த்தனா

தமிழ்நாட்டில் த.வெ.க அரசு அமைந்ததில் இருந்து ஊழல் மற்றும் லஞ்சம் இல்லாமல் ஆட்சியை நடத்துவோம் என்று தெரிவித்து வருகிறது. மேலும், பல துறைகளில் லஞ்சம் வாங்குவது ஒழிக்கப்பட்டு உள்ளதாகவும், லஞ்சம் வாங்கினால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் த.வெ.க அமைச்சர்கள் தொடர்ந்து பறைச்சாற்றி வருகின்றனர். 

பெண்கள் குறித்த சர்ச்சை: நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்; ஆதரவாளர்களுக்கு கேரள மதகுரு அறிவுறுத்தல்

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு கடை வைக்க உரிமம் கேட்டு மாற்றுத் திறனாளியான சுப்புராஜ் என்பவர் விண்ணப்பித்துள்ளார்.  தீயணைப்பு நிலை அலுவலர் செந்தூர் பாண்டியன் என்பவர் தடையில்லா சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுப்புராஜ் வீடியோ வெளியிட்ட நிலையில் துறை ரீதியான விசாரணையில் அது உண்மை என்பது தெரியவந்ததை அடுத்து தீயணைப்பு நிலை அலுவலர் செந்தூர் பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீர்த்தனா பதிவு வெளியிட்டு உள்ளார்.

அதில், ”லஞ்சம் வாங்கினாலும் சரி, தவறு செய்தாலும் சரி யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. இது தொடக்கம் மட்டுமே. மாற்றம் வரும் வரை நடவடிக்கை தொடரும். லஞ்சம் குறித்து தெரிந்தால் +91 70103 27687 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவியுங்கள். தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தப்ப முடியாது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Source link