கோவை : ”மத்திய அரசின் திட்டங்களை காப்பி, பேஸ்ட் செய்து திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறது,” என்று குஷ்பு கிண்டலடித்துள்ளார்.
கோவை வடக்கு தொகுதி பாஜ வேட்பாளர் வானதியை ஆதரித்து, அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவர் குஷ்பு வெங்கிட்டாபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:கோவையின் மகள் வானதி. நான் கோவையின் மருமகள். எம்ஜிஆர் ஜெயலலிதா இருந்தபோது தமிழகம் எப்படி முன்னேற்றமடைந்தது. பழனிசாமி முதல்வராக இருந்தபோது நமக்கு பாதுகாப்பு இருந்தது.
திமுகஆட்சியில் பெண்கள் வெளியில் செல்வதற்கு பயப்படுகின்றனர். கையில் ‘பெப்பர் ஸ்ப்ரே’வுடன் செல்கின்றனர். பெண் குழந்தைகள் வீடு திரும்பும் வரை, வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.
திமுகவினர் பெண்களை அடிமையாகத்தான் நடத்துவார்கள். திமுக அமைச்சர்கள், பெண்களை தகாத வார்த்தைகளில் பேசுகிறார்கள். தேஜகூ வெற்றி பெற்றால் தான் நல்ல திட்டங்கள் உங்கள் வீடு தேடிவரும்.
தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள அனைத்தும் மத்திய அரசு கொடுத்த திட்டங்கள் தான். அதில், திமுக ஸ்டிக்கரை ஒட்டி கொடுப்பார்கள். திமுக ஒரு ‘ஸ்டிக்கர்’ கம்பெனி. சொந்தமாக யோசிக்க மாட்டார்கள். மத்திய அரசின் திட்டங்களை ‘காப்பி’, ‘பேஸ்ட்’ செய்கின்றனர். இவ்வாறு, அவர் பேசினார்.
