தியேட்டரில் பார்த்த முதல் படம்… – 3 வயதில் அப்பா படத்தை பார்த்த ஜேசன் சஞ்சய்

முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சிக்மா’. இதில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். இவரோடு ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா மற்றும் ஜேசன் சஞ்சை இருவரும் தயாரித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் படக்குழுவினர் சமீப மாதங்களாக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் சேலத்தில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டு படம் குறித்து பேசியிருந்தார். பின்பு அவரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அதாவது இது அவரது முதல் படம் என்பதால் அவர் முதன் முதலில் செய்த விஷயம், பார்த்த படங்கள் தொடர்பாக கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், “நான் முதன் முதலில் தியேட்டருக்கு போய் பார்த்த படம் திருமலை. அப்போது எனக்கு 3 வயது. 

முதன் முறையாக நான் டைரக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டிய படம் ‘சிட்டி ஆஃப் காட்’. முதன் முதலில் எடுத்த ஷார்ட் ஃபிலிம் ‘புல் தி ட்ரிக்கர்’, 2022ஆம் ஆண்டு டைரக்ட் செய்தேன். முதன் முதலில் சிக்மா படத்தைப் பார்த்த நபர் தயாரிப்பாளர் ஜிகே குமரன். முதன் முதலில் நான் டைரக்டராகப்போறேன் என சொன்னது அம்மா” என்றார்.  

Source link