துருவ் விக்ரமின் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
துருவ் விக்ரம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், பின்னர் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ திரைப்படத்தில் நடித்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் வசூல் சாதனை படைத்தது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார்
துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணி
துருவ் விக்ரமின் புதிய படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார். இதன் மூலம் துருவ் விக்ரமும் ரமேஷ் வர்மாவும் முதல் முறையாக இணைகின்றனர்.
ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில், உணர்வுப்பூர்வ அம்சங்கள், டிராமா மற்றும் வலுவான கதை சொல்லலும் இடம்பெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. துருவ் விக்ரம் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்ட ஆக்சன் பின்னணியிலான கதாபாத்திரத்தில் கூறப்படுகிறது.
படப்பிடிப்பு அப்டேட்
இப்படத்திற்கான பூஜை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இப்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, துருவ் விக்ரமின் பிறந்தநாளான செப்டம்பர் 23ம் தேதி படத்தின் டைட்டில் மற்றும் முழுமையான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
துருவ் விக்ரம் -ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை மனதில் வைத்து பிரம்மாண்டமான ஆக்சன் படமாக உருவாக உள்ளது.
ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மகாவீர் கர்ணா’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
