நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கேமரூன் கிரீன், தனது நீண்டகால காதலியான எமிலி ரெட்வுட் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களின் திருமணம் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, அந்த சிறப்பு நாளில் எடுத்த பல புகைப்படங்களை இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இவர்களின் திருமணம்,  குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கேமரூன் கிரீன், எமிலி ரெட்வுட் தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Source link