அதோடு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் வியூகங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் வருகை தந்தார். இதனையடுத்து நாளை நடைபெற உள்ள தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீனை சந்தித்து அழைப்பு விடுத்தார். அப்போது அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்ட முஸ்லீக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக இடதுசாரிகள், மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் த.வெ.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ. ஆகிய கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. மற்றொருபுறம் தமிழகத்தில் இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
