நாமக்கல்: “நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது மூலம் நாம் பாதி வெற்றியடைந்துள்ளோம்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திருச்செங்கோடு கொமதேக வேட்பாளர் ஈஸ்வரனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தொகுதி மறுவரையறை மசோதாவை நாமக்கல்லில் தலைவர் ஸ்டாலின் தீயிட்டு எரித்தார். அந்த தீ நாடு முழுவதும் பரவியது.
நாடாளுமன்றத்திலும் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது. இது நமக்கு கிடைத்த பாதி வெற்றி தான். மீதி வெற்றி ஏப்.23-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் திமுகவுக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்வது. கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின் தலைவர் ஸ்டாலின் முதலில் கட்டணமில்லா பயணத்திட்டத்துக்கு கையெழுத்திட்டார்.
