“நிறைய தவிர்க்க முடியாத தடைகள் இருக்கும்”

முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சிக்மா’. இதில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். இவரோடு ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா மற்றும் ஜேசன் சஞ்சை இருவரும் தயாரித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் படக்குழுவினர் சமீப மாதங்களாக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் சேலத்தில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டு பேசுகையில், “இந்த படத்துடைய ஷூட்டிங் சேலத்துல கொஞ்ச நாள் நடத்தினோம். நம்ம வாழ்க்கையில எல்லாருக்கும் ஒரு சிக்மா மொமெண்ட் இருந்திருக்கும். அதாவது ஒரு பெரிய கஷ்டத்துல இருக்கும் போது நாம எடுத்த ஒரு முடிவுனால மொத்த வாழ்கையே மாறிருக்கும். அப்படிப்பட்ட ஒரு சாதாரண மனிதனுடைய வாழ்க்கையில் நடக்கும் கதை தான் இந்த சிக்மா. உங்க எல்லாராலும் இந்த படத்தை ரிலேட் செய்ய முடியும்னு நம்புறேன். கண்டிப்பா தியேட்டர் வந்து சப்போர்ட் பண்ணுவீங்கன்னும் நம்புறேன். படம் பிடிச்சிருந்தா நிச்சயம் நாலு பேர்கிட்ட சொல்லுங்க. உங்க எல்லாரையும் அக்டோபர் 2 தியேட்டர்ல சந்திக்குறேன்” என்றார். 

பின்பு அவரிடம் இனிவரும் அறிமுக இயக்குநர்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்னுடைய அனுபவத்துல சொல்றேன், நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸ் பண்ணுங்க, நினைக்குற கதையை எழுத ஆரம்பிங்க, நிறைய பிராக்டீஸ் பண்ணுங்க… ஒரு பட வாய்ப்பு கிடைக்கும் போது ரொம்ப பொறுமை தேவை. ஏன்னா நம்ம காலைல சீன் பேப்பரோட பக்காவா போவோம். ஆனா அதையெல்லாம் மீறி நிறைய தவிர்க்க முடியாத தடைகள் இருக்கும். அதையெல்லாம் தாண்டி நம்ம நினைச்சதை எப்படி எடுக்க முடியும்ங்குறதைத் தான் பார்க்கணும்” என்றார். 

Source link