நீங்கள் செய்வது ஒளிபரப்பவே தகுதி இல்லாதது; செக் வைத்த சல்மான் கான்: பிக்பாஸ் போட்டியாளர்கள் தேர்வு குறித்து விளக்கம்

சல்மான் கான் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ சீசன் 20 செப்டம்பர் 6-ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. புதிய போட்டியாளர்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில், தொலைக்காட்சி மற்றும் திரையுலகில் இருந்து பிரபலமான சிலர் மட்டுமே போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் முக்கியமான சீசனாக கருதப்படும் இந்த 20-வது சீசன், முதல் வாரத்திலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியது. போட்டியாளர்களின் தேர்வு மற்றும் முதல் வாரத்தில் நினைவில் நிற்கும் அளவுக்கு குறிப்பிடத்தக்க சம்பவங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் நிகழ்ச்சிக்கு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, சீசனின் முதல் ‘வீக்கெண்ட் வார்’ நிகழ்ச்சியில் சல்மான் கான் போட்டியாளர்களுக்கு அதிரடி அறிவுரை வழங்கியதுடன், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் போட்டியாளர் தேர்வு நடைமுறை குறித்தும் வெளிப்படையாகப் பேசினார்.

வார இறுதி நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் உரையாடிய சல்மான் கான், இந்த ஆண்டு போட்டியாளர்கள் குறித்து ரசிகர்கள் தெரிவித்து வரும் விமர்சனங்களை சுட்டிக்காட்டினார். அப்போது பேசிய அவர், “போட்டியாளர்களை நாங்களே தேர்வு செய்து அழைத்து வர வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் சில நேரங்களில் எங்களுடைய தேர்விலும் தவறு ஏற்பட்டு விடுகிறது. நிகழ்ச்சியில் அதிகமாகத் தெரியாதவர்கள், தாங்கள் விளையாட்டில் நிறைய விஷயங்களைச் செய்து கொண்டிருப்பதாக கூறி அதை தங்களுக்கான பாதுகாப்பாக எடுத்துக் கொள்கிறார்கள். 

உண்மை என்னவென்றால், நீங்கள் பேசுவதும் செய்வதும் ஒளிபரப்புவதற்குத் தகுதியானதாக இல்லை” என்று கூறினார். அதன்பின்னர் தனிப்பட்ட முறையில் சில போட்டியாளர்களை சல்மான் கான் விமர்சித்தார். அவர்கள் தங்களிடம் இருக்கும் திறமைக்கு ஏற்ப செயல்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அமன், நீங்கள் நிகழ்ச்சியின் முக்கிய கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தீர்கள் அல்லவா? ஆனால் இப்போது ஏன் ஒரு துணைக் கதாபாத்திரம் போல சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? 

நீங்கள் வந்து சில காட்சிகளில் மட்டும் தோன்றிவிட்டு செல்கிறீர்கள். இதற்கு மற்றவர்கள் மீது ஏன் பழி போடுகிறீர்கள்? இது உங்கள் தவறாக இருக்கலாம் என்று நீங்கள் ஒருபோதும் சிந்தித்திருக்கிறீர்களா? உலகம் முழுவதும் ஏராளமான அழகான மனிதர்கள் இருக்கிறார்கள். உதிதி, நீங்கள் உங்கள் தோற்றத்திற்காக இங்கு அழைத்து வரப்படவில்லை. உங்கள் ஆளுமைக்காகத்தான் இங்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். 

நிகழ்ச்சிக் குழுவினர் உங்கள் ஆளுமையால் மிகவும் ஈர்க்கப்பட்டனர். அதனால்தான் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் இருக்கிறீர்கள்” என்று சல்மான் கூறினார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படும் விதம் குறித்தும் விளக்கம் அளித்த சல்மான் “பிக் பாஸ் குழுவினர் ஆயிரக்கணக்கான நபர்களை சந்தித்து அவர்களிடம் நேர்காணல் நடத்துகிறார்கள். அவர்களிலிருந்து நீங்கள் 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை இறுதி செய்வதற்கு நிகழ்ச்சிக் குழுவினருக்கு சுமார் எட்டு மாதங்கள் ஆகின்றன.

உதாரணமாக, ஸ்கவுட் ஓ.பி.யை அவருடைய துறையில் ஏராளமானோர் அறிந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது அவரை மற்றவர்களும் அறிந்து கொள்வார்கள். ரோஹெட் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர். இனிமேல் அவரையும் மக்கள் அறிந்து கொள்வார்கள். வாழ்க்கையின் வெவ்வேறு துறைகளில் இருந்து நாங்கள் போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளோம்.

நீங்கள் அனைவரும் இங்கு வந்தபோது, ‘இது என்ன மாதிரியான போட்டியாளர் தேர்வு?’ என்று மக்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் ஒரு வாரத்திற்குப் பிறகு, சில போட்டியாளர்களை அனைவரும் விரும்பத் தொடங்கியுள்ளனர். சிலர் தங்களைச் சுற்றி உருவான எதிர்மறையான கருத்துகளை முதல் வாரத்திலேயே மாற்றியுள்ளனர். மற்றவர்களும் அதையே செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் பேசிய சல்மான், “ரிதி, தற்போது நீங்கள் இந்த வீட்டில் இருக்கும் ஒரு கல் போல இருக்கிறீர்கள். விரைவில் அதன் மீது பாசி படரத் தொடங்கிவிடும். ரோஹெட், நீங்கள் மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இங்கு வந்திருக்கிறீர்கள். ஆனால் 2 அல்லது 3 எபிசோடுகளில்கூட நான் உங்களைப் பார்க்கவில்லை. எல்லி அவ்ராம் அல்லது நடாலியா ஜானோசெக்கைப் போல உங்களுக்கு மொழித் தடையும் கிடையாது. 

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் பாரம்பரியம் என்னவென்றால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அனைவரும் நட்சத்திரங்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்துவதற்காகவே அவர்கள் இங்கு வருகிறார்கள். பிரபலங்கள் அல்லாத பலருக்கும் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் வந்து தங்களது திறமையை வெளிப்படுத்தி, நிகழ்ச்சியை விட்டு வெளியேறும்போது ஒரு நட்சத்திரமாக மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இனிமேல்தான் உங்கள் உண்மையான ஆளுமைகள் வெளிப்படத் தொடங்கும். உங்களை வந்து தீர்ப்பளிப்பதற்காக நான் இங்கு வரவில்லை. எனது கருத்துகளை மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். ஆனால் உங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்பு உங்களைத் தேடி வரும் என்று காத்திருக்காமல், கிடைக்கும் வாய்ப்பை நீங்களே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று சல்மான் கான் அறிவுறுத்தினார்.

Source link