நேபாள பெருவெள்ள பாதிப்பு; சீன வீராங்கனையின் நெகிழ்ச்சியான தருணம்

பனிச்சரிவின் காரணமாக நேபாள – திபெத் எல்லைப் பகுதியில் கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், நேபாளத்தின் 8 மாவட்டங்கள் நிலைகுலைந்து போயுள்ளன. கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 26) அன்று ஏற்பட்ட இந்த வெள்ளத்தால், ஆற்றின் கரையோரத்திலிருந்த வீடுகள், பாலங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.  

சகதியுடன் வந்த இந்த பெருவெள்ளத்தில் பல ஆயிரம் பேர் சிக்கித் தவித்தனர். இதில், 1100க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ள நிலையில், 4500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணி இரண்டாவது வாரமாகத் தொடர்ந்து வருகிறது. இது அந்நாட்டு மக்களிடையே பெரும் துயரமான சம்பவமாக மாறியுள்ளது. 

இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இந்தியா உட்படப் பல நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இதனிடையே, சீனாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையும், 2024 ஒலிம்பிக் சாம்பியனுமான ஜெங் கின்வென் (23) சீனா-நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்காக கிட்டதட்ட ரூ.1.25 கோடி (1.5 லட்சம் டாலர் / 1 மில்லியன் யுவான்) நிதியுதவி அளித்துள்ளார்.  

இது குறித்துப் பேசிய இவர், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தற்பொழுது நடந்து வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் நேரடியாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துப் பாராட்டி வருகின்றனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

இவர் ஏற்கனவே, கடந்த 2025-ஆம் ஆண்டு திபெத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போதும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்காக இதேபோன்று நன்கொடை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source link