பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா துணை நிற்கும்; பிரதமர் மோடி உறுதி

புதுடில்லி: அமெரிக்காவில் 9/11 பயங்கரவாத தாக்குதலை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, ”பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா துணை நிற்கும்” என உறுதி அளித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பயங்கரமான 9/11 தாக்குதல்கள் நடந்து 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதோடு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம். உலகம் முழுவதும் பயங்கரவாதம் எண்ணற்ற உயிர்களைப் பலிவாங்கியுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடான இந்தியா, பல தசாப்தங்களாகவே இப்போராட்டத்தில் முன்னணியில் இருந்து வருகிறது.பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து உருமாறி வந்தாலும், அதன் அனைத்து வடிவங்களுக்கு எதிரான எங்கள் உறுதியும் எதிர்ப்பும் மாறாமல் உள்ளன. இந்தத் தீமையை ஒழிப்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் முழு ஆதரவை அளிக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Source link