லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

லண்டன்: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமி​ழ​கத்​துக்கு வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்; நேற்று இரவு 10 மணி அளவில் சென்​னை​யில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்ற முதல்​வர், அங்​கிருந்து மற்​றொரு விமானத்​தில் லண்​டன் சென்​றார்.

லண்டன் விமான நிலையத்தில் பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். லண்​டனில் முதலீட்​டாளர்​கள் சந்​திப்​பில் பங்​கேற்​கும் முதல்​வர் விஜய், பல்​வேறு தொழில் நிறு​வனங்​களின் பிர​தி​நி​தி​களைச் சந்​தித்​து, தமி​ழ​கத்​தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.

லண்​டனில் உள்ள புகழ்​பெற்ற ‘சில்​வர்​ஸ்​டோன் மோட்​டார் ரேஸிங் சர்க்​யூட்’ வசதி​கள் மற்​றும் அதற்​கான சுற்​றுப்​பாதையை​யும் முதல்​வர் பார்​வை​யிட உள்​ளார். இக்குழு 17ம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளது.

இக்குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில்துறை வழிகாட்டி நிறுவன இயக்குனர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Source link