போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ 30 நாட்கள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
நார்வேக்கு எதிரான போட்டியில் விளையாட ரொனால்டோவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் ஆடும் வாய்ப்பு அளிக்கப்படாததற்கு பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் தான் காரணம் என்று அவர் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.
டென்மார்க்கில் நடைபெற்ற அடுத்த போட்டியின் போது அணியின் முகாமில் இருந்து எவ்வித அனுமதியும் இன்றி ரொனால்டோ வெளியேறினார். இது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது.
விதி 160 (1)வது பிரிவின் கீழ், ரொனால்டோ வேண்டும் என்றே விதிகளை மீறியதால், அவருக்கு 30 நாட்கள் விளையாட போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கை குழு தடை விதித்தது. 27,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
எந்தெந்த போட்டிகளில் அவருக்கு தடை என்பது குறித்து எந்த அறிவிப்பையும் போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்புக் குழு அறிவிக்கவில்லை.
