பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷமா; ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? செம லாபம் தான்

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்கள் கடந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் டுவிஸ்ட் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும், டி.டி.எஃப் வாசன் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்குவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டைமண்ட் டாஸ்கின் போது டி.டி.எஃப் வாசன் செய்த வேலைகள் பலரையும் அவரை உன்னிப்பாக கவனிக்க வைத்தது.

30 எம்.எல்.ஏ-க்களுக்கு முதற்கட்ட ட்ரைனிங்; மாமல்லபுரத்தில் தொடங்கிய தலைமைத்துவ பயிற்சி முகாம்

ஒவ்வொரு வாரம் இறுதியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், கடந்த வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கடந்த சனிக்கிழமை ரம்யா கிருஷ்ணன் நேரம் ஆன காரணத்தினால் பேச்சை நிறுத்தும் படி கூறியும் ஜெய்சன் நிறுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இப்படி பல பிரளயங்கள் நடக்கும் பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ஷமா வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, கடந்த வாரம்  முத்தழகி, அக்‌ஷிதா, அஷ்மிதா உடன் ஷமா டேன்ஜர் சோனில் இருந்தார். முத்தழகி தான் வெளியேற்றப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென ரம்யா கிருஷ்ணன் ஷமாவின் பெயரை அறிவித்தார்.

முன்னதாக எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை முதல் ஆளாக ஷமா வென்றிருந்தார். தொடர்ந்து, இரண்டாவது பாஸை டி.டி.எஃப் வாசனும், மூன்றவாது பாஸை ஜெய்சனும் வெற்றிருந்தனர். ரம்யா கிருஷ்ணன் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை பயன்படுத்துகிறீர்களா என்று ஷமாவிடம் கேட்டபோது அவர் மக்கள் மீது இருந்த நம்பிக்கையில் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கடைசியில் அவர் தான் எலிமினேட் செய்யப்பட்டார்.

என்னதான் ஷமா 50-வது நாளில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தாலும் அவருக்கு ஒரு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, பிக்பாஸ் வீட்டில் இருக்க ஷமாவிற்கு ஒரு நாளைக்கு ரூ.10,000 கொடுக்கப்பட்டதாம். அப்படி 50 நாட்களுக்கு ரூ.5 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link