ரசிகர்களை கவர்ந்ததா மாயாஜால அமானுஷ்ய திரில்லர் – ‘டிரோன்ஸ்’ விமர்சனம்

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு ஃபேரி டைல் மாயாஜாலம் நிறைந்த அமானுஷ்ய படம் வெளியாகி இருக்கிறது. நாம் சிறுவயதில் பார்த்து ரசித்து வியந்த இதுபோன்ற படங்கள் இன்றைய காலகட்டத்தில் வெளிவருவது அரிதாக இருக்கிறது. அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்பொழுது இருக்கும் ரசிகர்களை ரசிக்க வைக்கும் நோக்கில் வெளியாகியிருக்கும் இந்த டிரோன்ஸ் திரைப்படம் வரவேற்பை பெற்றதா, இல்லையா? 

நாயகன் டிராவிட் நாயகி அஞ்சலி நாயர் மற்றும் அவரது நண்பர் ஆர் ஜே தீபக் ஆகியோர் கல்லூரியில் படிக்கும் மாணவர்களாக வருகின்றனர். இவர்கள் ஒரு சேட்டை செய்ததனால் அவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்கிறது. தங்கள் வீட்டுக்கு தெரியாமல் சில நாட்களை எங்கேயாவது கழிக்க வேண்டும் என எண்ணும் அவர்களுக்கு குரேஷியின் ஆய்வு கூடத்தில் தஞ்சம் அடைகின்றனர். அங்கு ஒரு ட்ரோன் மூலம் இவர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. அந்த ட்ரோனை வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டில் இருக்கும் சித்தி சித்தி இட்னானியை கண்காணிக்கிறார் டிராவிட். 

ஒரு கட்டத்தில் அவர் மேல் காதல் வயப்படும் டிராவிட் அந்த வீட்டிற்குள் செல்ல அங்கு ஒரு சூனியக்கார கிழவியிடம் மாட்டிக் கொள்கிறார். இவரைத் தேடி வரும் அவரது நண்பர் ஆர் ஜே தீபக் மற்றும் மற்றொரு நாயகி அஞ்சலி நாயர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சினிமாவாலா சதீஷ் மற்றும் அவரது டிடெக்டிவ் நண்பர் மற்றும் குரேஷி ஆகியோர் அனைவரும் அந்த வீட்டுக்குள் வசிக்கும் சூனியக்கார கிளவி தேவதர்ஷினியிடம் மாட்டிக் கொள்கின்றனர்.

பிளாக் ஹோலை மையமாக வைத்து அதன்மூலம் சூனியமும் விஞ்ஞானமும் கலந்து இருக்கும் அந்த வீட்டினுள் மாட்டிக்கொள்ளும் இவர்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. சாகா வரம் பெற்ற நாயகி சித்தி இட்னானி மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் இவர்கள் அனைவரையும் வீட்டினுள் அடைத்து அன்புத்தொல்லை கொடுத்து சித்திரவதை செய்கின்றனர். இதைத்தொடர்ந்து இந்த வீட்டினுள்ளிருந்து இவர்கள் அனைவரும் தப்பித்தார்களா, இல்லையா? டிராவிட் – சித்தி காதல் என்னவானது? என்பதே இத்திரைப்படத்தின் மீதி கதை. 

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வித்தியாசமான மாயாஜாலம் நிறைந்த அதோடு சயின்ஸ் பிக்சன் கலந்த ஒரு திரைப்படமாக இந்த டிரோன்ஸ் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. கதைகளும் மிகவும் வித்தியாசமாக இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அதேசமயம் இது ஒரு பேய் படமா அல்லது திரில்லர் படமா? அல்லது மாயாஜால படமா? என்பது போல் இல்லாமல் அனைத்து தரப்பு ஜானர்களையும் கலந்து கட்டி வித்தியாசமான படமாக இந்த திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராகவ் மிர்தாத். 

முதல் பாதி முழுவதும் மர்மமான முறையில் அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியாமலே நகரம் திரைப்படம் இரண்டாம் பாதியில் கதைக்குள் சென்று விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் காமெடிகள் நிறைந்த அமானுஷ்யம் கலந்த விஞ்ஞான மாயாஜால திரைப்படமாக நகர்ந்து முடிகிறது. படத்தை ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் அடைக்க முடியாமல் பல்வேறு ஜானகர்கள் படம் முழுவதும் படர்ந்து வருவது பல இடங்களில் ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் அயற்சி கொடுக்கிறது. அதேபோல் படத்தின் மேக்கிங்கும் இன்னமும் கூட பிரம்மாண்டமாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். அது ஒரு குறிப்பிட்ட அளவு இருப்பது சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. மற்றபடி குழந்தைகள் குடும்பத்துடன் ரசிக்கும் புது விதமான படமாக இந்த டிரோன்ஸ் படம் அமைந்திருக்கிறது. 

நாயகன் பரிதாபங்கள் டிராவிட் முதல் முறையாக நாயகனாக அறிமுகமாகி இருக்கும் திரைப்படத்தில் தனக்கு என்ன வருமோ அதை சிறப்பான முறையில் செய்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு என்ன நியாயம் செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறார். நாயகி அஞ்சலி நாயர் டாம் பாயாக வருகிறார். அவருக்கு கருப்பு பெயிண்ட் அடித்து இருப்பது சற்று விசித்திரமாக இருந்தாலும் போகப்போக அது பழகிக்கொள்ளும்படி இருக்கிறது. அதுபோக அதற்காக இறுதிக்கட்டத்தில் கொடுத்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இருப்பது கூடுதல் சிறப்பு. தனக்கு கொடுத்த வேடத்தை சிறப்பான முறையில் செய்திருக்கிறார். நாயகி சித்தி இட்னானி கன்னக்குழியோடு மிக மிக அழகாக ஏஞ்சல் போல் இருக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை மிக சிறப்பான முறையில் செய்து தன் அழகின் மூலம் கவர்கிறார்.

போலீசாக வரும் சினிமாவாலா சதீஷ் சிறப்பான முறையில் தனக்கு என்ன வருமோ அதை நிறைவாக கொடுத்து இருக்கிறார். இறுதி கட்டத்தில் இவர் நடிக்கும் காட்சி சிறப்பாக அமைந்திருக்கிறது. இவருடன் டிடெக்டிவாக வரும் நடிகரும் மற்றும் ஆர் ஜே தீபக்கும் பல இடங்களில் பஞ்ச் காமெடிகள் அடித்து நம்மை சிரிக்க வைக்கின்றனர். இவர்கள் இருவருக்குமே காமெடியில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இவர்களை தமிழ் சினிமாவில் நன்றாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம். சூனியக்கார கிழவியாக வரும் தேவதர்ஷினி நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பயமுறுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்று இருக்கின்றனர். 

ஹரி எஸ் ஆர் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. குறிப்பாக காமெடி மற்றும் திகில் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சிறப்பான முறையில் இசை கொடுத்திருக்கிறார். ஜெயந்தி சேது மாதவன் ஒளிப்பதிவில் தேவதை சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வித்தியாசமான ஃபேண்டைசி கலந்த மாயாஜாலம் நிறைந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த டிரோன்ஸ் திரைப்படம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. இருந்தும் படத்தில் பல்வேறு ஜானர்கள் கலந்து கட்டி திரைக்கதையில் கொடுத்திருப்பது பல இடங்களில் குழப்பமும் அயர்ச்சியும் கொடுத்திருப்பதால் ஏதேனும் ஒரு ஜானரை பிடித்துக் கொண்டு இத்திரைப்படத்தை கொடுத்து இருந்தால் இன்னமும் சிறப்பான படமாக அமைந்திருக்கும்.

டிரோன்ஸ் – வித்தியாசமான முயற்சி!