பாண்டி எமோஷனல்: பிக் பாஸ் 10 நிகழ்ச்சி துவங்கியஇரண்டாவது நாளான இன்று லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் அனைவரும் கிடையாது கிட்சன் துறையின் தலைவர், உறுப்பினர்கள் மட்டும் தான் கலந்து கொள்ள முடியும் என விதிமுறைகளை பிளாக் பாண்டி வாசிக்கும் ப்ரொமோ வீடியோ வெளியானது. பாண்டி ரூல்ஸை சொல்லும்போதே முகேஷ் போர்டுக்கு சென்று அரிசி எவ்ளோ, பருப்பு எவ்வளவு என கேட்க ஆரம்பித்தார். ஆனால் பிக் பாஸ் கொடுத்த நேரத்திற்குள் டாஸ்க்கை முடிக்க முடியாமல் திணறிவிட்டார் பாண்டி. அதை பார்த்து மற்றவர்கள் கடுப்பாகி அவரை திட்டவில்லை. ஆனால் அவர் தான் பாவம் ரொம்ப ஃபீல் செய்து கண் கலங்கிவிட்டார்.
ராஸ்கல் உன்னால் தான் எங்களுக்கு லக்ஷுரி டாஸ்க் பொருட்கள் கிடைக்காமல் போனது என பாண்டியை யாரும் குறை சொல்லவில்லை. மாறாக அவரை புரிந்து கொண்டு அனைவரும் ஒன்று சேர்ந்து ஆறுதல் கூறினார்கள். பிக் பாஸ் வீட்டில் ஒற்றுமையா என பார்வையாளர்களுக்கே ஒரு நிமிடம் தலை சுற்றிவிட்டது. ஆனால் நிஜமாகவே ஒற்றுமையை காட்டியிருக்கிறார்கள். அதற்கு காரணம் பாண்டியின் கண்ணீர். என்ன பாண்டி நீங்க, இதுக்கே அழுதுவிட்டீர்கள். நீங்கள் அழுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை. சண்டை எல்லாம் வந்தால் பாண்டி என்ன செய்வாரோ என்று அவரின் ஆதரவாளர்களுக்கு ஒரு பக்கம் கவலையாக உள்ளது.
காமன்மேன் முனியம்மா: இன்னும் எத்தனை சீசனாக தான் நான்லாம் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா என சொல்வீர்கள் என்று நடத்தப்பட்ட பிக் பாஸ் தி காமன்மேன் நிகழ்ச்சி மூலம்தேர்வு செய்யப்பட்ட முனியம்மா ஆரம்பத்திலேயே ட்ரோல் மெட்டிரீயலாகியிருக்கிறார். முனியம்மா கொடுக்கும் ரியாக்ஷன்கள், பேசுவதை எல்லாம் பார்த்தால் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மாதிரியே இருக்கிறது. வாட்டர் மெலன் 2.0 தான் இந்த முனியம்மா.
லேடி வாட்டர் மெலன் , லேடி தர்பீஸ் என அவர் ரியாக்ஷன்களை வைத்து ஏற்கனவே மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கிடையே சிலரோ, எவன்யா அது எங்கக்காவ தர்பீஸுடன் ஒப்பிட்டு பேசுவது?. முனியம்மா அக்காவை எல்லாம் அவ்வளவு சீக்கிரமாக வெளியேற்றிவிட முடியாது. கிரண்டு லான்ச்சில் துவங்கி கிராண்டு ஃபினாலே வரை பிக் பாஸ் வீட்டில் தங்கப் போகும் போட்டியாளரை போய் வாட்டர்மெலன் ஸ்டாருடன் ஒப்பிடுவது தவறு என்கிறார்கள்.
முனியம்மா மகன்: இதற்கிடையே தலைவரை கேள்வி கேட்பது குறித்து முனியம்மா சொன்ன அந்த பாயிண்ட் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. தலைவி பேசும்போது எதிர்த்து பேசக் கூடாது என்பது உங்களின் கருத்து. அந்த தலைவரையே நாம் தான் தேர்வு செய்தோம்.அந்த தலைவர் செய்வது தவறாக இருந்தால் கண்டிப்பாக கேள்வி கேட்பேன் என்பது என் எண்ணம் என்றார். அவர் என்னவோ பிக் பாஸுக்காக தான் இப்படி பேசியிருக்கிறார். ஆனால் பிக் பாஸில் ஜனநாயக அறை வைத்திருப்பதால் இது வெளி உலகிற்கும் பொருந்தும் என மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
முனியம்மா மட்டும் அல்ல அவரின் மகன் இஷாந்த் சர்மாவும் பிரபலமாகிவிட்டார். அக்காவின் கணவருக்கு கிரிக்கெட் பிடிக்குமாம். அதிலும் குறிப்பாக இஷாந்த் சர்மாவை ரொம்ப பிடிக்குமாம். அதனால் தான் மகனுக்கு இஷாந்த் சர்மா என பெயர் வைத்திருக்கிறார்கள். அடேக்கப்பா, இஷாந்த் சர்மாவுக்கு இப்படியொரு ரசிகரா என வியப்பவர்கள் பலர்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
முனியம்மா மாதிரியே காமன்மேன் வெற்றியாளரான ஜேசனும்பிக் பாஸ் வீட்டில் வந்து பார் என்று நடந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
