புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டு பிரதிநிதிகள், மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார். அதன் மெனு பட்டியல் தற்போது வைரலாகி வருகிறது.
பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் முடிந்த பிறகு, வெளிநாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடியின் சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ, பியூஷ் கோயல், சிவராஜ் சிங் சவுகான், சர்பானந்த சோனோவால், அர்ஜுன் ராம் மேத்வால், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஒரே பஸ்ஸில் ஒன்றாக பாரத் மண்டபத்திற்குச் சென்றனர்.
இந்த பிரம்மாண்ட விருந்தின் போது, இந்தியா மற்றும் பிற பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்ட குழுவினர் இணைந்து ‘பிரிக்ஸ் சிம்பொனி கலை நிகழ்ச்சியை வழங்கினர்.
இந்த நிலையில், பிரதமர் அளிக்கு விருந்தின் மெனு பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், ஸ்டார்ட்டர் வகைகளாக ‘கண்ட்வி மில்லே – பியூய்’ மற்றும் ‘கும்ப் கலோதி’ பரிமாறப்பட்டன.
முதன்மை உணவாக. பன்னீர் லபாப்தார், குச்சி மர்மிக், கேரட் பீன்ஸ் பொரியல், தக்காளி பெல்லே சாரு, தினைப் புலாவ் மற்றும் பீட்ரூட் ராய்தா இடம்பெற்றன. இனிப்பு வகைகளாக பழைய டில்லி பழக் க்ரீமுடன் ஜிலேபி மற்றும் ஷாத்துத் பிர்னி பரிமாறப்பட்டன.
