பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து; முதல்வர் காட்டம்

கேரள மாநிலம், கொச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இஸ்லாமிய மத குருவான அபுபக்கர், “ பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது. அப்படிக் கலந்து கொண்டால் அது பேரழிவை ஏற்படுத்தும்” என்று பேசியிருந்தார். இது பெண்களின் சுதந்திரத்திற்கும், வளர்ச்சிக்கும் எதிரானது என்று பல்வேறு தரப்பினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.  

இதற்கு, கேரள முதல்வர் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் வி.டி.சதீஷன், ”பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டும் என்ற கருத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். இதுபோன்று கூறுவதற்கு இது ஒன்றும் 19-ம் நூற்றாண்டு அல்ல. பெண்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கக்கூடாது. அவர்கள் பொது வாழ்வில் இணைய வேண்டும்” என்று கூறினார். 

அதே நேரத்தில், இது குறித்துப் பேசிய அமைச்சர் பிந்து கிருஷ்ணா, “பாலின பாகுபாடு இன்றி ஆண்கள், பெண்கள் இருவருக்கும் சமமான உரிமைகளை நமது அரசியல் சாசனம் உறுதி செய்துள்ளது. சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை மக்கள் அனைவரும் பெற்றிருக்கிறார்கள்.குறிப்பாக, பெண்கள் சுதந்திரமாக இயங்கக் கூடியவர்களாகவும், சிறந்த ஆட்சியாளர்களாகவும் திகழ்கிறார்கள்” என்று  தெரிவித்திருந்தார்.  

Source link