தவெகவின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலாக வெற்றி விரைவில் தனது ஒளிபரப்பை தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக மலையாளத்தில் வெற்றி சேனலை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கு விஜயம் என்று பெயர் வைத்துள்ளனர்.
“V” என்பது தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் அடையாளமாக மாறிக் கொண்டிருக்கிறது. தனது கட்சி பெயரை தொடர்ந்து, அரசு ரீதியாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள், மாநாடுகள் உள்ளிட்டவற்றிலும் இந்த “V” என்பது வெற்றி என்ற பெயரில் முன்னிலைப் படுத்தப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள செய்தி சேனல்களுக்கு போட்டியாக தங்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு சேனலை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கான டிஜிட்டல் வலைதளப் பக்கங்கள் தயாராகி விட்ட நிலையில், ஒளிபரப்பிற்கான சோதனை ஓட்டங்கள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு வெற்றி சேனல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மலையாள மொழியில் ”விஜயம்” என்ற பெயரில் தங்கள் சேனலை விரிவுபடுத்த உள்ளனர்.
Source link
