தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றன. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியது. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் 2029 தேர்தலில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது.
தவெக ஆட்சி அமைத்ததற்கு பின்பாக ஆளுங்கட்சியை நோக்கி அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் சென்று விட்டனர். முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்லாமல் இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கூட தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமாகி விட்டனர். இதனிடையில் முன்னாள் அமைச்சரான ஆர்.பி. உதயகுமார், இபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். இவர் ஆளுங்கட்சியான தவெகவை நோக்கி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருக்கிறார்.
குறிப்பாக முதல்வர் பற்றியும் விமர்சித்து வரும் நிலையில், ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராக தவெகவினர் புகார் அளித்து வருகின்றனர். இப்படியான நிலையில் 2029 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார் என ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கை காட்டுபவரே பிரதமராக வருதற்கு மக்கள் தீர்ப்பு அளிப்பார்கள்.
அதே தேர்தலுடன் ஒரே நாடு ஒரே தேர்தலோடு நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்சலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக அமர்வார் என கருத்து தெரிவித்துள்ளார் ஆர்.பி. உதயகுமார்.
