”மீண்டும் போராட்டம் வெடிக்கும்”; பாஜக அரசுக்கு சோனம் வாங்சுக் எச்சரிக்கை

லடாக் தொடர்பான கோரிக்கைகளில் ஒன்றிய அரசு உடனடியாக உறுதியான உத்தரவாதம் அளிக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கடந்த பல ஆண்டுகளாக லடாக்கிற்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் 6வது அட்டவணையின் கீழ் லடாக்கை சேர்க்க வேண்டும். உள்ளூர் மக்களின் நிலம் மற்றும் வேலை வாய்ப்புகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்  வைக்கப்பட்டு வருகின்றன.  இந்த கோரிக்கைகளுக்கு ஆளும் ஒன்றிய பாஜக அரசு எந்தவித உறுதிப்பாட்டையும் தெரிவிக்கவில்லை.  

கடந்த புதன்கிழமை அன்று (09-09-26) அன்று லடாக் கோரிக்கைகள் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், எதிர்பார்க்கப்பட்ட எழுத்துப்பூர்வ உறுதியையோ அல்லது உறுதியான முன்மொழிவுகளையோ ஒன்றிய அரசு அளிக்கவில்லை. அதனால், லே உச்ச அமைப்பு மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றின் லடாக் பிரதிநிதிகள் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.  

இந்நிலையில், தங்களது கோரிக்கைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக் கவலை தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் செப்டம்பர் 19 முதல் 24 வரை, லடாக்கில் பிரமாண்ட பேரணியும், தொடர் போராட்டங்களும் மீண்டும் தொடங்கும் என சோனம் வாங்சுக் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு முன்பாக இவர் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். குறிப்பாகக் கடந்த நீட் போராட்டத்தின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர், உலக அளவில் கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Source link