முதல்வர் விஜய் தொடங்கி வைத்த கார் பந்தயம்; 3ஆம் பிடித்த அஜித்குமார் அணி!

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டர் ரேஸ் மைதானத்தில் நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை  சர்வதேச கார் பந்தயத்தில், பிரபல நடிகரும் பந்தய வீரருமான அஜித்குமார் தனது ‘அஜித் குமார் ரேசிங்’  குழு சார்பில் பங்கேற்றார். அதே சமயம் இங்கிலாந்திற்குத் தனது முதலாவது அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த உலகத்தரம் வாய்ந்த பந்தய நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பச்சைக் கொடி அசைத்து அஜித்குமாரின் கார் பந்தயத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

பந்தயக் களத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்யை அஜித்குமார் நெகிழ்ச்சியுடன் வரவேற்று, இருவரும் பரஸ்பரம் கட்டித்தழுவி தங்களது பல ஆண்டுக்கால நட்பைப் பகிர்ந்துக் கொண்டனர். அதன் பின்னர் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதில் அஜித்தின் கார் மீது விஜய் அமர்ந்து புகைப்படம் எடுத்து அஜித்துக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.

மற்றொருபுறம், லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரபல முன்னணி நடிகை த்ரிஷாவும் இந்த சர்வதேசப் பந்தயத்தை நேரில் காண்பதற்காகச் சில்வர்ஸ்டோன் மைதானத்திற்கு வருகை தந்திருந்தார்ர். அதன்படி, பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து த்ரிஷாவும் பந்தயத்தைக் கண்டு ரசித்தார். அங்கு முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் ஒரே இடத்தில் இருந்தவாறு பந்தயத்தை ரசித்தனர்.

இந்த நிலையில், முதல்வர் விஜய் தொடங்கி வைத்த கார் பந்தயம் நிறைவு பெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 9:30 மணிக்கு தொடங்கிய இந்த பந்தயம் இரவு 11:45 மணியளவில் நிறைவடைந்தது. 5.1 கி.மீ பந்தயத் தூரம் கொண்ட இந்த போட்டியில், அஜித்குமாரின் அணி 3ஆம் இடம் பிடித்துள்ளது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் 16வது இடத்தில் இருந்த அஜித் அணி, படிப்படியாக முன்னேறி 3வது இடம் பிடித்து சாதனை படைத்தனர். 

Source link