தவெக அரசை கவிழ்க்க சதி வேலைகளில் ஈடுபட்ட வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக் குமார் ஆகியோர் இருவரும் திருவல்லிக்கேணியில் உள்ள காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையொப்பம் இட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டாஸ்மாக் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு, இவரின் உதவியாளர் சுப்பிரமணி வீடு, திமுக நிர்வாகி பாஸ்கரன் வீடு, கோதை நகரில் உள்ள ரமேஷ் மற்றும் பாஸ்கரின் வீடு என 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் கரூர் தொழிற்பேட்டையில் இருக்கும் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையை மேற்கொண்டனர்.
டாஸ்மாக் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன்படி காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறை மற்றும் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் டாஸ்மாக் மூலம் வரும் வருவாய் அனைத்தும் அரசு கஜானாவுக்கே வர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதன் பேரில், அதிகாரப்பூர்வமற்ற முறையில் பணம் வசூல் செய்யும் அமைப்புகளை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் படியாக இன்று காலை 7 மணி முதல் தமிழ்நாட்டில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன் பாளையம், நவகரை உள்ளிட்ட டாஸீமாக் கிடங்குகளில் சோதனை நடத்தப்பட்டது. இதுதவிர மன்னார்குடி, மேட்டுப்பாளையம், ஈரோடு, சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
