மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு துப்பாக்கியுடன் வந்தவர் கைது

மும்பை: பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு பிரதமர் அலுவலக அதிகாரி என வந்தவர் மற்றும் அவருடன் துப்பாக்கி கொண்டு வந்தவர் என இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள நீடா அம்பானி கலாசார மையத்தில் இன்று( செப்.,08) நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் சந்தேகத்திற்கு உரிய முறையில் நடந்து கொண்ட ஒருவரையும், அவரது உதவியாளர் ஒருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் ரோஹன் பரேக்(24) என்பது தெரியவந்தது. அவர், பிரதமர் அலுவலக அதிகாரி எனக் காட்டும் அடையாள அட்டை ஒன்றை வைத்து இருந்தார். அதனை ஆய்வு செய்ததில் அந்த அடையாள அட்டை போலி எனத் தெரியவந்தது. அவருடன் வந்தவரிடம் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த விசாரணை மும்பை குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் எதற்காக அங்கு வந்தனர்?அவர்களின் நோக்கம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்த மொபல்போன், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Source link