2 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமா; திமுக முடிவு நாளை தெரியும்!

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் நாளை (செப்.9) ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளார்.

தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இவற்றில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவித்துள்ளது. அக்.6ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுவதாக அறிவித்து, வேட்பாளர்களை அடையாளம் காணும் பணிகளை தொடங்கி உள்ளது. விருப்ப மனு விநியோகத்தையும் அதிமுக நடத்தி வருகிறது.

இந் நிலையில் இடைத்தேர்தலில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், முன்னணி பொறுப்பாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் நாளை (செப்.9) ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளார். ஆலோசனையின் போது இடைத்தேர்தல் விவகாரம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? அங்குள்ள களநிலவரம், தொண்டர்களின் மனநிலை ஆகியவை குறித்து ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளார். ஆலோசனைக்கு பின்னர், முழு விவரங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link