குறிப்பாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியிலேயே தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் வெற்றியை நழுவவிட்டு தோல்வியை தழுவியது என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதே போல், பல முன்னாள் அமைச்சர்களும், திமுகவின் முக்கிய முகங்களும் தோல்வியைத் தழுவினர். குறிப்பாக மு.க.ஸ்டாலினின் தோல்வியை தற்போது வரி திமுக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பல தொண்டர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
இந்த சூழலில், கொளத்தூர் தொகுதியில் ஈவிஎம் பர்ண்ட் மெமரி/ மைக்ரோ கண்ட்ரோலர் (EVM Burnt Memory/ Micro controller)ஐ சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும் என கொளத்தூர் தொகுதி வேட்பாளாரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்திருந்தார். அவர் அளித்த மனுவின் அடிப்படையில், நாளை (29-07-26) காலை 9 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை கிடங்கில் இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெறவுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாளை சரிபார்க்கப்பட உள்ளது.
