“ரசிகர்களை அலட்சியமாக நினைக்கவில்லை…” – நானி எடுத்த அதிரடி முடிவு

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’. எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் மோகன் பாபு, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, ராகவ் ஜூயல் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளியான ‘ஆயா ஷேர்’மற்றும் கீர்த்தி சுரேஷ் நடனமாடிய ‘யேஷனகுலா’ பாடல்கள் இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றது. 

இப்படத்தின் டீசர் கடந்த ஆகஸ்டில் வெளியான நிலையில் 1980-களில் செகந்திராபாத் பின்னணியில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது நிலத்தை பாதுக்காக்க போராடுவதை காட்சிபடுத்தியிருந்தது போல் அமைந்தது. இப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த சூழலில் டிரெய்லர் படத்திற்கு வெளியாகாது என நானி தெரிவித்துள்ளார். 

அவர் பேசுகையில், “இந்த படத்திற்கு டிரெய்லர் வெளியாகாது. தேவையான எதிர்பார்ப்பு ஏற்கனவே இருப்பதாகச் சிலர் கூறினார்கள். ஆனாலும், நான் பார்வையாளர்களை சாதாரணமாகவோ அல்லது அலட்சியமாகவோ எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது ஒரு தரமான படத்தை உருவாக்கப் பல குழுக்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். இப்போது ஒரு டிரெய்லரை வெளியிடுவதாக இருந்தால், அது மிகச் சிறப்பாக இருக்க வேண்டும். அப்படி உருவாக்குவதற்கு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை சில நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டியிருக்கும். நாங்களும் ஒரு நல்ல டிரெய்லரை வெளியிட விரும்பினோம். ஆனால் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, அதை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்” என்றார். 

Source link