ரஜினி ஸ்வாக்; அடுத்த அப்டேட் வெளியிட்ட ‘தர்மன்’ படக்குழு!

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘தர்மன்’. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமலும் டர்மெரிக் மீடியா சார்பில் மகேந்திரனும் தயாரிக்கின்றனர். சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்க அன்பறிவ் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றுகின்றனர். 

இப்படம் ஒரு ஸ்டைலான டாக்டரின் வாழ்க்கையின் பின்னணியில் குடும்ப ரசிகர்களும் பார்க்கும்படியான த்ரில்லர் ஜானரில் படம் உருவாவதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார். மேலும் படையப்பா படமும் வேட்டையாடு விளையாடு படமும் கலந்த ஒரு படமாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இதனால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது. 

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூனில் தொடங்கியது. பின்பு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் அந்த படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதில் சில முக்கியமான மருத்துவமனை மற்றும் வீடு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 



Source link