லண்டனில் முதல்வர் விஜய் – அஜித் சந்திப்பு; கார் பந்தயத்தை துவக்கி வைக்கிறார்

லண்டன்: லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் விஜய், அங்கு கார் பந்தயத்தில் பங்கேற்றிருக்கும் நடிகர் அஜித்தை சந்தித்து வாழ்த்து கூறினார்.

புதிய தொழில முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் விஜய் அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், லண்டனில் மிகவும் பிரபலமான லீ மென்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தை துவக்கி வைக்கவும் இருக்கிறார். இந்தக் கார் பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்தும் பங்கேற்றுள்ளார்.

தற்போது, லீ மென்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தின் இறுதிப்போட்டிக்கு நடிகர் அஜித்குமாரின் அணி தகுதி பெற்றுள்ளது. இந்த சூழலில், கார் பந்தயத்தை துவக்கி வைப்பதற்காக, சில்வர்ஸ்டோன் சர்க்கியூட்டிற்கு முதல்வர் விஜய் நேரில் சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள லண்டன் வாழ் தமிழர்கள், அவருடன் செல்பி எடுத்து ஆட்டோகிராப் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, அங்கு அஜித்தை சந்தித்த முதல்வர் விஜய், கார் பந்தயத்தில் வெற்றி பெற தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகர திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ள நிலையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ள சில்வர் ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டை அவர் பார்வையிட உள்ளார். அப்போது, அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களை சிறப்பாகவும் , வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ள இருக்கிறார்.

Source link