அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், “பிரதமர் வேட்பாளர் குறித்து விஜய் மிகவும் தெளிவாக இருக்கிறார், நாங்களும் தெளிவாக இருக்கிறோம், தவெகவும் தெளிவாக இருக்கிறோம். எங்களை பொறுத்தளவில் ராகுல் காந்தி தான் இந்தியா கூட்டணியின் அடுத்த பிரதமர் வேட்பாளர். அதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். அதற்கு காலம் வரும் எல்லோரும் வெளிப்படையாக சொல்வார்கள். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தலைவராக விஜய் இருக்கிறார். தமிழகத்தினுடைய முதல்வராக விஜய் தொடர வேண்டும்.
யார் யாரெல்லாம் எம்.பி வைத்திருக்கிறோமோ அவர்கள் எல்லாம் இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள். இந்தியா கூட்டணியின் தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார். அதனால் எந்த குழப்பமும் கிடையாது. 2029 தேர்தலில் ராகுல் காந்தியின் தலைமையில் இந்தியா கூட்டணி பெறும். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி மிகப்பெரிய அளவில் 40க்கு 40 இடங்களையும் வெல்லும். இந்த கூட்டணி பலமான கூட்டண். ஒவ்வொரு நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கும் விஜய் பிரச்சாரம் செய்வார். அவருடைய பிரச்சாரத்தில் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்” என்று கூறினார்.
