விமலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை ரத்து!

விமல் தயாரித்து நடித்து 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘மன்னர் வகையறா’. இந்த படத்திற்காக பைனான்சியர் கோபி என்பவரிடம் 4.5 கோடி ரூபாய் விமல் கடனாக பெற்றார். அந்த தொகையைத் திருப்பி தரும் வகையில் விமல் காசோலை வழங்கினார். ஆனால், அந்த காசோலையில் பணம் இல்லை என்று வந்துள்ளது. இதையடுத்து விமல் மீது கோபி, செக் மோசடி வழக்கு தொடுத்தார். 

இந்த வழக்கு சென்னையில் உள்ள சிறு வழக்குகளையும் விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் கடன் தொகையைத் திரும்பிக் கொடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விமல் தரப்பில் சென்னை 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  

அந்த மனுவில், ஓராண்டு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ரூ.10 லட்சத்தை 60 நாட்களில் விசாரணை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் தண்டனையை நிறுத்திவைத்து ஆகஸ்ட் 4ஆம் தேதி உத்தரவிட்டார். 

Source link