விருந்தில் பங்கேற்க பஸ்சில் பயணித்த முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள்

புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டில் முதல் நாள் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி, அளித்த இரவு விருந்தில் பங்கேற்க முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பஸ்சில் பயணித்தனர்.

டில்லியில் பிரிக்ஸ் மாநாடு இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. இதில் நேற்று (செப்., 12) முதல் நாள் நிறைவடைந்தது. இதனையடுத்து, பிரதமர் மோடி, பங்கேற்ற முக்கிய தலைவர்கள், முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என அனைவருக்கும் இரவு விருந்து ஏற்பாடு செய்தார். பார்லி.வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்தப் பஸ்சில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் முதல்வர்கள் யோகி ஆதித்யநாத் (உ.பி), தேவேந்திர பட்னாவிஸ் (மஹாராஷ்டிரா) உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பாரத் மண்டபத்திற்கு பஸ்சில் பயணித்தனர்.

இது குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

புதுடில்லி உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்பதற்காக, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுடன் இணைந்து நானும் பேருந்து மூலம் அந்த இடத்திற்குப் பயணம் செய்தேன். மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைத்து விருந்தினர்களின் சுமூகமான நடமாட்டத்தைக் கருத்தில் கொண்டும், அதே வேளையில் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும், பஸ்களை பயன்படுத்தும் முறை பின்பற்றப்பட்டது. சிறந்த மேலாண்மை, வளங்களின் சரியான பயன்பாடு மற்றும் பொதுமக்களின் வசதி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் இந்த ஏற்பாடு, நல்லாட்சிக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.

இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Source link