தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், வீட்ல என்னை மீட் பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? என்று பதிவிட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், என் அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம்.. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் நடந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களுக்கும் நம் உடன்பிறந்தவர்களுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியிருப்பதை நான் உணர்கிறேன். அதுவும் இந்த சர்ச்சையில் என்னுடைய சிறை வரலாறும் இருக்கிறதால், அதை பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தம்பி விஜய் நீங்க சொல்றது உண்மை தான். பொய் எல்லாம் அல்ல.. எமெர்ஜென்சில் காலத்தில் அதை எதிர்த்து கலைஞர் மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி மிசா சட்டத்தை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து அப்போது இருந்த ஒன்றிய அரசு 30.01.1976 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை கலைத்தார்கள். ஆட்சியை கலைத்த அடுத்த நொடி மிசா சட்டத்தில் என்னை கைது செய்வதற்காக கோபாலபுரம் வீட்டிற்கு போலீசார் வந்தார்கள்.
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? pic.twitter.com/kzpwXi14L8
— M.K.Stalin (@mkstalin) September 10, 2026
அன்னைக்கு நான் வீட்டில் இல்லை. பையன் பிரசாரத்திற்கு போய் இருக்கான். நாளை வந்துவிடுவான். வந்ததும் நானே போன் பண்ட்ரேன்.. வந்து அரெஸ்ட் பண்ணிக்கோங்க என சொன்னார். அடுத்த நாள் போலீசிடம் என்ன கைது செய்ய சொல்லிட்டார். சிறையில் எனக்கு பல கொடுமைகள் நடந்துச்சு.. என்னை கொண்டு போய் அடைத்ததே தொழு நோயாளிகள் இருக்கும் இடத்தில் தான். 10 பேரை ஒரு சின்ன அறைக்குள் அடைத்து வைத்தார். அந்த அறைக்குள்ளேயே ஒரு பானைக்குள் தான் அத்தனை பேரும் சிறுநீர் கழிக்கனும்.
ரொம்ப துர்நாற்றமாக இருக்கும். இந்த அறையில் தான் நாங்கள் தூங்க வேண்டும். நைட்டில் தூங்க விடாமல் போலீஸ் லத்தியால் அடிப்பாங்க.. பூட்ஸ் காலால் மிதிப்பாங்க.. இன்னொரு பக்கம் ஆயுள் தண்டனை கைதியை வைத்து கொடூரமாக அடிப்பாங்க. அவங்க அடித்ததில் என் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டி பாபு ஜெயிலிலேயே இறந்து போனார். அவங்க அடிச்சதில் என்னுடைய தாடை எலும்பு உடைந்தது. நீங்க கூட இப்படி கை வைத்து தாடையை காண்பீத்தீர்கள் அல்லவா? அது கரெக்ட் தான். இன்னைக்கும் இந்த தழும்பு இருக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
