வெடித்து சிதறிய பெங்களூர் விதான சவுதா.. ரீல்ஸ்க்காக ஏஐ வீடியோ போட்ட பீகார் தொழிலாளி கைது

பெங்களூர்: பெங்களூரில் உள்ள விதானசவுதா (கர்நாடகா சட்டசபை கட்டடம்) வெடித்து சிதறுவது போல் ஏஐ மூலம் வீடியோ உருவாக்கி ரீல்ஸ் வெளியிட்ட பீகார் தொழிலாளியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவரது பெயர் ஹஸ்ரத் அலி சோயப் என்பதாகும். அவர் பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் பெங்களூரில் கடந்த சில மாதங்களாக தங்கி ‘பைப்’ கனெக்‌ஷன் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.