அமெரிக்க அதிபர் மாளிகையில் இருந்து வெளியாகியுள்ள தகவல் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, தனது மூன்று பெண் உதவியாளர்களுக்கு அதிபர் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தலா ரூ.45 லட்சம் ரொக்கமாகச் சிறப்புப் பரிசு வழங்கியுள்ளார்.
வெள்ளை மாளிகையின் சிறப்பு மற்றும் நிர்வாக உதவியாளர் நட்டாலி ஹார்ப், ஊடக ஆலோசகர் மார்கோ மார்டின் மற்றும் ஓவல் அலுவலக துணை இயக்குநர் லெய்ன் ஹாரிஸ் ஆகிய மூவருக்கும் இந்த தொகை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகை அறிக்கையின்படி, இவர்கள் மூவருக்கும் வருடத்திற்கு ரூ.1.35 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், தன்னுடன் நெருங்கி இருக்கும் ஊழியர்களுக்கு அதிபர் ட்ரம்ப், இது போன்ற மிகப் பெரிய அளவிலான தொகையை ரொக்கமாக வழங்குவது சட்ட நெறிமுறைகளுக்குட்பட்டதா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
அதே நேரத்தில் ட்ரம்ப் வழங்கிய இந்த பணம் அரசு நிதியா? அல்லது அவரது சொந்த பணமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் தக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள அதே நேரத்தில், இதற்குப் பொதுமக்களிடையேயும் கடும் அத்திருதியை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தொகை அதிகாரப்பூர்வ பணிகளுக்கு அப்பாற்பட்டுத் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த சம்பவம் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
