3 மாதங்களுக்கு ஒரு முறை; குழந்தைகளுக்கு அரசின் புதிய திட்டம்

கேரள மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் ஆயிரக்கணக்கான இளம் குழந்தைகளுக்கு, வழக்கமான சுகாதாரப் பரிசோதனையானது, இனி வரும் காலங்களில் அவர்களின் குழந்தைப்பருவத்தின் ஒரு பகுதியாக அமையவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  

அங்கன்வாடி குழந்தைகளுக்குத் தொடர்ச்சியான மற்றும் முழுமையான சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு ‘பால்ய ஸ்பந்தனம்’ என்ற திட்டத்தை, அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த  செவ்வாய்க்கிழமை (01-09-26)  அன்று வெளியானது. 

இந்த திடத்தின் மூலமாக மொத்தம் உள்ள 33,120 அங்கன்வாடிகளிலும் உள்ள குழந்தைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த திட்டத்தினால், சுகாதாரப் பணியாளர்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து நிலையை உன்னிப்பாகக் கவனிப்பதோடு, அவர்களின் கண் மற்றும் காதுத் திறனையும் பரிசோதிப்பார்கள். இதன் மூலம் வளர்ச்சி மாற்றங்கள் அல்லது உடல்நலப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து, தேவைப்படும்போது தகுந்த நிபுணர்களின் சிகிச்சை மற்றும் தொடர் மருத்துவக் கவனிப்பை அவர்களுக்கு வழங்க முடியும். அதனால், குழந்தைகளின் சுகாதாரம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Source link