இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 133 ரன்களில் சுருண்டது.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 453 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்சில் சொதப்பிய பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடியது. இதனால் 449 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 130 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்.
4-வது நாளான இன்று இங்கிலாந்து 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. முதல் ஓவரில் முபமது அப்பாஸ் டக்கெட், எமிலியோ கே ஆகியோரை டக்அவுட் ஆக்கினார். 3-வது விக்கெட்டுக்கு ஜோர்டான் டாக்ஸ் உடன், ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலக்கை எளிதாக எட்டியது.
இதனால் இங்கிலாந்து 3 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. ஜோடார்ன் காக்ஸ் 59 ரன்களுடனும், ஜோ ரூட் 62 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
