புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் சந்தித்து பேசினர். அப்போது, இருதரப்பு உறவு குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜின் பிங் இன்று இந்தியா வந்தார். மாநாட்டிற்கு அவரை பிரதமர் மோடி மகிழ்ச்சியோடு வரவேற்றார். முதல் நாள் மாநாட்டுக்கு பிறகு, டில்லியில், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். அப்போது, இருதரப்பு உறவு குறித்து இருநாட்டு தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே, சீன அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; பிரிக்ஸ் தலைமைத்துவத்திற்கு கொடுத்த ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் சீனாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டின் மூலமாக, இந்தியா – சீனா இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மீண்டும், அவரை இந்தியாவுக்கு மனதார வரவேற்கிறேன்,’ என கூறியுள்ளார்.
