'5 ஆண்டுகளில் 29,000 காவலர் பணி உருவாக்கப்படும்!' – முதல்வர் விஜய் உறுதி!

சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. காவல்துறையை முதல்வர் கையில் வைத்திருப்பதால், அந்தத் துறை சார்ந்த அறிவிப்புகளை முதல்வர் விஜய் இன்று அறிவித்திருக்கிறார்.

முதல்வர் விஜய்

காவல்துறை சார்ந்து முதல்வர் விஜய் வெளியிட்ட சில அறிவிப்புகள் இங்கே, ‘29,108 காவலர் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.

போதைப் பொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக ஒழிக்கும் கிராமம் ஒன்றுக்கு 10 லட்ச ரூபாய் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்.

212 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் காவல்துறை நவீன்மயமாக்கப்படும்.

லஞ்சம் லாவண்யத்தை ஒழிக்க காவல்நிலையங்களுக்கு ஒதுக்கப்படும் சில்லறை செலவினங்கள் நிதி உயர்த்தி வழங்கப்படும்.

பணிக்காலத்தில் இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை 30 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

CM Vijay
CM Vijay

பணியின் போது துணிச்சலாக பணியாற்றி உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு 1கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும்.

சேலம் மற்றும் விழுப்புரத்தில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் மரபணு சோதனை வசதி நிறுவப்படும். 200 கோடி ரூபாய் செலவில் காவல்துறையினருக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படும்.’ என்றார்.

Source link